செபி உத்தரவின் பேரில் தேசிய பங்குச் சந்தை அதானிக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. அதானி குழுமம் அனைத்து விதமான தகவல்களையும் பங்குச்சந்தைக்கு வெளிப்படுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. சந்தை விதிமுறைகளை அதானி குழுமம் முறையாக பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்வதற்கான அதன் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆய்வை தொடங்கியுள்ளதாக செபி கூறியுள்ளது.