மணிப்பூரின் லட்சணம் வீட்டைச் சுற்றி முள்வேலி அமைத்த அமைச்சர்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இம்பால், நவ.23- மணிப் பூர் அமைச்சர் ஒருவர் வன் முறையாளர்களிடம் இருந்து பாதுகாக்க தனது வீட்டை சுற்றிலும் முள் வேலி அமைத் துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அங்கு சமீபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்த நிகழ்வால் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
இந்த கொலையை கண் டித்து கடந்த 16ஆம் தேதி மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஆங்காங்கே வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.

தலைநகர் இம்பால் உள் பட பல மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் வீடுகளை வன்முறையாளர்கள் குறையாடினர். வீடுகளில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது மட்டும் இன்றி வீடுகளுக்கு தீவைத்தும் சென்றனர்.
3 அமைச்சர்கள் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது இத்தகைய தாக்கு தல்கள் நிகழ்த்தப்பட்டன. முதலமைச்சர் பைரன் சிங்கின் பூர்வீக வீட் டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான முயற்சிகளும் நடந்தன.
இதனிடையே 16ஆம் தேதி வீடுகள் சூறையாடப்பட்ட நிகழ்வின்போது மேற்கு இம்பா லின் தாங்க்மெய்பண்ட் பகுதியில் உள்ள அய்க்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப் பினர் ஜாய் கிஷன் சிங் வீட்டில் இருந்து ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அண்மையில் தெரியவந்தது.

அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் வீடுகள் சூறையாடப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே இனக்கலவரம் ஏற்பட்ட நாள் முதல் இதே போன்று பல முறை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது.

வீட்டை சுற்றி முள்வேலி அமைப்பு
இந்த நிலையில் மணிப்பூர் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினி யோகத் துறை அமைச்சர் சுசிந்த்ரோ மெய்டே, ஏற்ெகனவே 3 முறை தாக்கு தலுக்கு ஆளான தன் னுடைய பூர்வீக வீட்டை வன்முறையாளர்களிடம் இருந்து பாதுகாக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி அவர் தனது வீட்டை சுற்றிலும் முள்வேலி மற்றும் இரும்பு வலை அமைத்துள்ளார். அதுமட்டும் இன்றி ஆபத்து காலங்களில் பயன்படுத்தும் வகையில் பதுங்கு குழிகளையும் அமைத்துள்ளார்.
இதுப்பற்றி சுசிந்த்ரோ மெய்டே கூறுகையில், “என் சொத்துக்களுக்கு தீவைக்க வும், கொள்ளை மற்றும் சேதம் விளைவிக்கும் நோக்கத்து டனும் கடந்த 16-ஆம் தேதி வன் முறையாளர்கள் என் வீட்டை தாக்கினர். 3ஆவது முறையாக என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே என் வீட்டை இப்போது முள் வேலி, இரும்பு வலைகள் மூலம் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
வன்முறையாளர்களால் தாக்கப்படும்போது எங்கள் உயிர்களையும் சொத்துக் களையும் பாதுகாக்க அரச மைப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமை எங்களுக்கு உள்ளது” என கூறினார்.

7 பேர் கைது
இதனிடையே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களின் வீடுகளை சூறையாடிய நபர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். அதே வேளையில் அமைச் சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சூறைாடப்பட்ட சம்பவத்தில் இதுவரை 7 பேரை கைது செய்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *