தென்காசி, நவ.23- தென்காசி மாவட்டம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் தென்காசியில் சிவந்திநகர் கலைஞர் அறிவலயத்தில் 17-11-2024 அன்று பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் கே.டி.சி. அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர்இரா.தமிழ்ச்செல்வன் வருகிற டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திடும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு நடைபெறுவதின் நோக்கத்தினை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
மாநில ப.க.அமைப்பாளர் ஆலடி.எழில்வாணன், காப்பாளர்.சீ.டேவிட் செல்லத்துரை, மாவட்ட ப.க.தலைவர் பேராசிரியர் ஜி.எஸ்.எஸ்.நல்லசிவம், தி.மு.க. மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் (தெற்கு), மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், துணைத்தலைவர் ம.செந்தில்வேல், தென்காசி ப.க.தலைவர் சி.சேக்கிழார், கோ.சாமிதுரை, அ.சவுந்திரபாண்டியன், ஊத்துமலை சீனிவாசன், சங்கரன்கோவில் மொகன், கருப்பசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பொறுப்பாளர்: ஜெ.பாரதிராஜா தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளராக மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர்இரா.தமிழ்ச்செல்வன் அவர்களால் அறிவிக்கப்பட்டார்.
மாநாட்டிற்கு நன்கொடை அறிவிப்பு: ஆலடி எழில்வாணன் ரூ25,000, வே.ஜெயபாலன் ரூ50,000