தருமபுரி, நவ. 23- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம் 21.11.2024 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன் ஒருங்கிணைப்பு மற்றும் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் கு. சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மாவட்ட துணைத் தலைவர் இளைய. மாதன், ப.க. மாவட்ட செயலாளர் இர. கிருஷ்ணமூர்த்தி, ப.க. மாவட்ட அமைப்பாளர் தி. அன்பரசு முன்னிலை வகித்தனர். தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் கூட்டத்தின் நோக்கவுரையை நிகழ்த்தினார்.
மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி ஈரோடு மாநாடு பற்றியும், வருகிற டிசம்பர் 2 ஆசிரியர் பிறந்த நாள் விழாவை பற்றியும் சிறப்பானதொரு கருத்துரை வழங்கினார்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
எதிர்வரும் 26.11.2024 அன்று தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ், நூற்றாண்டு விழா மாநாட்டிற்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து 5 மகிழுந்து வாகனத்தில் செல்வது எனவும்,
எதிர்வரும் 2.12.2024 அன்று நம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92-ஆம் ஆண்டின் பிறந்த நாள் விழாவிற்கு(சென்னை) தருமபுரி மாவட்டத்திலிருந்து தோழர்கள் தனிப்பேருந்தில் செல்வது எனவும்,
24.11.2024 அன்று திருச்செங்கோட்டில் நடைபெறும் அய்ம்பெரும் விழாவிற்கு வாகனத்தில் செல்வது எனவும்,
டிசம்பர் 28, 29 அன்று திருச்சியில் நடைபெறும் அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு மாநாட்டிற்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து 2 வேனில் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தின் மேனாள் மாவட்ட கழக கூடுதல் செயலாளர் கெங்கலாபுரம் இராஜா வாகன விபத்தில் கடந்த 18.11.2024 அன்று மறைவுற்றார். அவருக்கு இக்கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில்
மா. செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர், மு. சிசுபாலன் மாவட்ட தொழிலாளரணி தலைவர், பொ. மாணிக்கம் மாவட்ட தொழிலாளரணி செயலாளர், க. சின்னராசு விடுதலை வாசகர் வட்ட தலைவர், கரு. பாலன் நகர தலைவர், ஆர். பழனி மேனாள் நகர தலைவர், பெ. கோகிலா மகளிர் பாசறை செயலாளர், ஊமை. காந்தி விவசாய அணி தலைவர், மு. மனோகரன் மேனாள் மாவட்ட தலைவர், பெ. கோவிந்தராஜ் மேனாள் மாவட்ட செயலாளர், ம. சுந்தரம் , மாதேஷ், என். சிவலிங்கம், கணேசன், சி. ரங்கநாதன், கோ. முருகன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் மா.முனியப்பன் நன்றியுரையாற்றினார்.