மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பர்கத்துல்லாப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் ஆளுநர் மங்குபாய் சி. பட்டேல், மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், உயர் கல்வி அமைச்சர் கிந்தர் சிங் பர்மா ஆகியோர் பங்கேற்றனர். இதில், பட்டமளிப்பு உரையை, உயர்கல்வித்துறை அமைச்சர் நிகழ்த்தினார். அவர்தம் உரையில் கூறிய செய்திகளாவன:
இந்தியாவின் பெருமைமிக்க கப்பல்கள் அட்லாண்டிக் கடலைக் கடந்து சென்றுள்ளன. நமது முன்னோர்கள் கொலம்பசை தோற்கடிக்கும் வகையில் காரிய மாற்றியுள்ளனர்.
சீனாவின் பீஜிங் நகரம், இந்தியக் கட்டடக்கலை நிபுணர்களின் உதவியால் வடிவமைக் கப்பட்டது. அவர்கள் ராமர் சிலைகளை அமைத்தனர். ரிக் வேதத்தை எழுதியவர்கள், பூமி, சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை முன் கூட்டியே சொல்லி உள்ளனர்.
இப்படிக் கூறும் ஒரு மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சரின் ‘வரலாற்று செய்தி’ யின் தரத்தின் மூலம் அம்மாநிலக் கல்வித் துறையின் முன்னேற்றப் பாதையை அறியலாம்.
– மு.வி. சோமசுந்தரம், கோயம்புத்தூர்