ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சருக்கு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. கடிதம்!
சென்னை, நவ. 23- நீதித்துறையில் உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பிராந்திய அளவில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகள் நிறுவப்பட வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமனங்களில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்றும், விகிதாச்சார முறையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்திட வேண்டும் என்றும் விளக்கமாகக் குறிப்பிட்டு விரிவான கடிதத்தை ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் அர்ஜூன ராம் மெக்வாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
உடனடித் தீர்வு
பின்வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
டில்லியில் ஒரு அரசமைப்பு அமர்வுடன், கூடுதலாக வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை டில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் நிறுவுதல்.
இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மற்றும் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்தல்.
அரசமைப்பு திருத்தங்களை செயல்படுத்துவதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதி களின் ஓய்வு பெறும் வயதை 65 லிருந்து 70 ஆகவும் உயர்த்த வேண் டும் – அனைத்தும் தேவையான அரசமைப்பு திருத்தங்கள் மூலம்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் அனு மதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், இந்த வேண்டுகோள்களை தாங்கள் சாதகமாக பரிசீலித்து செயலாற்றுவீர்கள் என்று நம்பு கிறேன்.
-இவ்வாறு மாநிலங்களவை தி.மு.கழக உறுப்பினர் – மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் கடி தத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.