செம்பியம் – திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர், பெரவள்ளூர் ‘சன் ஷைன்’ சலவையக உரிமையாளர் கேப்டன் இரமேசு (வயது 61) நேற்றிரவு (19.11.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு விஜயா என்கிற மனைவியும், மகள் ஏமாவதி மற்றும் பல் மருத்துவர்களான இர.அசோக்குமார், மருமகள் அருந்ததி ஆகியோர் உள்ளனர்.
திரு.வி.க.நகர், எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் உள்ள இல்லம் சென்று அவரது உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தே.சே.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சி.பாசுகர், கொளத்தூர் ச.இராசேந்திரன், செம்பியம் பகுதி கழக தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், செயலாளர் டி.ஜி.அரசு, பாவேந்தர் பகுத்தறிவு பாசறை செயலாளர் ஓவியர் கிருபா, ச.க.கோதண்டபாணி மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
இன்று (20.11.2024) மாலை 4 மணிக்கு திரு.வி.க. நகர் தாங்கல் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
மறைவு
Leave a Comment