ஸ்டாலின் அரசு கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி வருகிறது. ஒரு கருத்தைச் சொல்வதைக் கூட ஸ்டாலினால் தாங்க முடியவில்லை. எதற்கும் சிறை; கஸ்தூரி என்ன கூறினார். அவர் மனதிற்குப் பட்டதைக் கூறினார். அவர் கூறியதில் உண்மையும் உள்ளது ஏற்கெனவே பலர் கூறியதுதான், ஆனால் அவரை ஏதோ தீவிரவாதிபோல் தேடிச்சென்று கைதுசெய்துள்ளனர். சிறை வைத்தது கஸ்தூரியை அல்ல கருத்துச் சுதந்திரத்தை என்று கஸ்தூரி கைது குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை அவர்களே நினைவிருக்கிறதா?
கல்லூரி மாணவி சோபியா பாசிச பாஜக ஒழிக என்றுதான் விமானத்தில் முழக்கமிட்டார்.
அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? படிக்கும் மாணவி அவரது எதிர்காலம் வீணாகிவிடும் நாங்கள் எச்சரிக்கிறோம் என்று காவல்துறை உயரதிகாரிகள் மன்றாடிய போதும், அது எப்படி, நாளை இவளே தீவிரவாதியாக மாறிவிடுவாள். ஆகவே இவளுக்குப் பாடம் புகட்டவேண்டும் நீங்கள் அவள் கருணை காட்டுவதை நான் ஏற்கமுடியாது, நீங்கள் புகாரை ஏற்காவிட்டால் நான் உள்துறையிடம் புகார் அளிப்பேன் என்று காவல்துறை உயரதிகாரிகளை மிரட்டி 19 வயது மாணவியை சிறைவைத்தது மட்டுமல்லாமல், அவரது கனடா நாட்டுக் கல்விக்கே வேட்டு வைத்தார். தமிழிசை ஒட்டுமொத்த தமிழ்நாடே தமிழிசையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது.
அவர் இன்று கஸ்தூரிக்கு கண்ணீர் வடிப்பது நகைப்பாக உள்ளது.