தமிழ்நாட்டில் சில்வர் பேப்பர், நெகிழி (பிளாஸ்டிக்) கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. சில்வர் பேப்பர், நெகிழி (பிளாஸ்டிக்) உறைகளை கடையில் விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உத்தரவை மீறி நெகிழி கவரில் உணவு பார்சல் செய்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடைக்கு சீல் வைத்து ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.