தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.8.2024) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் 32 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 விடுதிக் கட்டடங்கள், 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 14 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 32 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 சமுதாயக் கூடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் காந்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.