தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, நவ.19- “வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஒன்றிய அரசு தன்னிச்சையாக செயல்படுவதை ஏற்க முடியாது, இதனைக் கண்டித்து தி.மு.கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு களம் காண தயங்காது” என்று தி.மு.க. அணி செயலாளர் டாக்டர் சுபேர்கான் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலச் செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு மாநில துணைச் செயலாளர்கள் இரா.அன்வர்கான், நூருல்லா, ஜோசப்ராஜ், என்.பி.எம்.ஷேக் அப்துல்லா, அடையாறு ஷபீல், கா.ரபிஅகமது, மு.ஷாகுல் அமீது ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னதாக, திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தன் எழுச்சிமிகு எழுத்துகளால் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்த தி.மு.க.வின் கொள்கைச் செல்வம்; மிகச் சிறந்த எழுத்தாளர் மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, கீழ்க்கண்ட தீர் மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
அது வருமாறு:–
குறிப்பாக, மாற்று மதங்களிலிருந்து இசுலாம் மதத்தைத் தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சான்றிதழும் (BCM) 3.5% இடஒதுக்கீடும் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்ட முதல மைச்சர் அவர்களுக்கு அனைத்து இசுலாமிய சமுதாய மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
“எல்லார்க்கும் எல்லாம்”
“எல்லார்க்கும் எல்லாம்” கிடைத்திட எண்ணற்ற பல திட்டங்களை தந்திட்டு எளியோரின் வாழ்வில் ஏற்றமிகு மாற் றங்களை உருவாக்கிடும் நாடு போற்றும் நம் திராவிட மாடல் அரசிற்கு உறு துணையாய், உற்ற துணையாய் விளங்கிடும் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பினை வழங்கிய தி.மு.க. தலைவர்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த திருவள்ளுவர் புகழை வையத்திற்கு உணர்த்திட குமரி முனையிலே வானுயர சிலை அமைத்தார் தலைவர் கலைஞர் அவர்கள். செம்மொழி நாயகர் தலைவர் கலைஞர் வழியில் வரும் டிசம்பர் மாதம் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் சார்பாக இக்கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவிக்கப்படுகிறது.
ஆற்றல்மிகு இளம் தலைவர்
எண்ணமும், செயலும் தி.மு.க. வுக்காகவும், தமிழ்நாட்டு இளைஞர் களின் முன்னே ற்றத்துக்காகவும் அர்ப்பணித்து நாளைய தலைமுறையை வழிநடத்தும் தி.மு.கழக இளைஞ ரணிச் செயலாளர்; ஆற்றல்மிகு இளம் தலைவர் அவர்களின் பிறந்த நாளை யொட்டி, நவம்பர் -27 ஆம் தேதி இளைஞர்களின் எழுச்சி நாளாக ஏழை – எளிய மக்களை மகிழ்விக்கும் வகையில் தி.மு.க. சிறுபான்மை யினர் நல உரிமைப்பிரிவு சார்பில் தி.மு.கழக மாவட்டங்களில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடுதல்.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், நம் தி.மு.க. அரசு சிறுபான்மையின மக்களின் வாழ்வு சிறக்க செய்திட்ட சாதனைகளை “நம்மில் ஒருவர் நமக்கான தலை வர் மு.க.ஸ்டாலின்” எனும் தலைப் பில் கருத்தரங்கங்கள் மூலம் சிறுபான்மை யினர் நல உரிமைப்பிரிவின் சார்பில் மாவட்டங்கள் தோறும் கொண்டு சேர்த்தோம்.
கருத்தரங்கம் நடத்தப்படும்
அதன் தொடர்ச்சியாக, சிறுபான்மை யினரின் ஒரே பாதுகாவலர் ஒப்பற்ற தலைவர்; முதலமைச்சர் அவர்கள் என்பதை உரக்கப் பேசிட வரும் ஜனவரி மாதம் முதல் திருச்சி, சேலம், வேலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிடினும் என்றைக்கும் சிறுபான்மையினரின் மக்களுக்கு தோளோடு தோள் நிற்கும் மகத்தான இயக்கம் என்பதை மக்கள் மன்றத்தில் பதியச் செய்திடும் வகையில், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக திகழும் முதலமைச்சர் அவர்களின் சாதனைச் சரித்திரத்தையும், சிறுபான்மையினருக்கு செய்திட நலத்திட்டங்களையும் தமிழ்நாடெங்கும் கொண்டு சேர்த்தல்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர் தலுக்கான பணிகளை இன்றே துவங்கி ஏழாவது முறையாக தி.மு.க. ஆட் சியமைக்க தி.மு.க. சிறுபான்மை யினர் நல உரிமைப்பிரிவு நிர்வாகிகள் அயராது உழைத்திட உறுதியேற்போம்.
கடும் கண்டனத்துக்குரியது
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) முடிவுகளை அதன் தலைவரான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தன்னிச்சையாக எடுப்பது கடும் கண்டனத்துக்குரியது. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆராய தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய மக்களவை உறுப்பினா்கள் 21 பேரும், மாநிலங் களவை உறுப்பினா்கள் 10 பேரும் இடம் பெற்றுள்ள நிலையில், வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் தன்னிச்சையாகவும், ஆதிக்க மனப்பான்மையுடனும் செயல்படுவது துளியும் ஏற்கத்தக்கதல்ல.
தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பதோடு, சிறு பான்மையினரின் நலனை நேரிடையாக பாதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தி.மு.கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு தி.மு.கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு களம் காண தயங்காது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக எச்சரிக்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.