மணிப்பூர், நவ.19- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிபூரில் பாஜகவின் வகுப்புவாத அரசியலால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பற்றி எரிந்து வரு கிறது. இன்னும் வன்முறை நிகழ்வுகள் கட்டுக்குள் வராத சூழலில், சமீபத்தில் குக்கி பழங்குடியின இளம்பெண் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்வுகள் நிகழ்ந்த தாக சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் குக்கி பழங் குடியினத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அடுத்த 2 நாட்களில் காணாமல் போனதாக கூறப்படும் மெய்தி பிரிவைச் சேர்ந்த 6 பேர் பிணங்களாக மீட்கப் பட்டனர். இவ்வாறு மணிப்பூரில் கடந்த 10 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கிடையே மணிப்பூரில் வன்முறை கட்டுப் படுத்துவதாக கூறி மேற்கு மாவட்டத்தின் சேக் மாய், லாம்சங், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் லாம்லை, ஜிரிபாம் மாவட்டம் முழுவதும், காங்போக்பியின் லீமாங்கோங் மற்றும் பிஷ்ணு பூரின் மோய்ராங் உள்ளிட்ட 6 காவல் நிலையப் பகுதிகளில் ஆயுதப் படைகளின் சிறப்பு சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்தியது.
7 மாவட்டங்களில் ஊரடங்கு
மாநிலத்தில் நீடிக்கும் வன் முறை, ஆயுதப் படைகள் (சிறப்பு அதி காரங்கள்) சட்டம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜிரிபாம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத் துடன் வன்முறை நிகழ்வுகளும் நிகழ்ந்து வருவதால் 7 மாவட்டங்களின் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஊரடங்கு உத்தரவை மீறி மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங் களில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.
பாஜக அமைச்சர்கள் மீது தாக்குதல்
இந்நிலையில், 16.11.2024 அன்று இரவு இம்பாலில் வசிக்கும் 3 அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கின் மருமகனும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கே.இமோ உட்பட 6 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
மேலும் சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தினர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பாதுகாப்புப் படையினர் வன்முறையாளர்களை விரட்டி யடித்தனர். ஆனாலும் வன்முறை, போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
மோடி அரசுக்கு மணிப்பூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை!
மணிப்பூரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், ஆளும் பாஜக கட்சி யை சேர்ந்த 19 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் ஏற்கெனவே கடந்த மாதம் மாநில முதலமைச்சரை மாற்றக் கோரி, பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அதேநேரம் மணிப்பூரில் உள்ள சில அமைப்புகள், அடுத்த 24 மணி நேரத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசுக்கு கெடு விதித்துள்ளன.
அமைச்சரைவையும் நெருக்கடி
இதனைத் தொடர்ந்து மணிப்பூ ரில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஆயுதப்படை சிறப்பு சட்டங்களை ஒன்றிய அரசு மீண்டும் அமல் படுத்தி உள்ளதன் காரணமாகவே வன்முறை நிகழ்வுகள் தீவிர மடைந்து வருகின்றன. அந்த சட்டத்தை விரைவில் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசுக்கு மணிப்பூர் பாஜக அரசு கோரிக்கை விடுத துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.