முஸ்லீம்களின் ஓட்டு எங்களுக்குத் தேவையில்லை

1 Min Read

பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் மதவெறிக் கூச்சல்!

லக்னோ, நவ.19 உத்தரப்பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முந்தைய அரை இறுதிப்போட்டியாக இங்கு 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 20 ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
இந்தத் தேர்தலில் 9 தொகுதி களையும் கைப்பற்ற ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக இருதரப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தியா கூட்ட ணியில் இருந்தாலும் இந்த 9 தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடுகிறது.
அலிகர் மாவட்டம் கேர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அலிகர் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் பேசிய தாவது:

‘‘நான் கடந்த 3 மக்களவைத் தேர்தலிலும் ஹிந்து சகோதர, சகோதரிகளின் வாக்குகளால் வெற்றி பெற்றேன். நான்காவது முறையாகவும் ஹிந்து வாக்கு களால் வெற்றி பெறுவேன் நான் நாடாளுமன்றத் தேர்தலின் போது நேரடியாக துணிச்சலுடன் கூறினேன் இதனால் தான், இப்போதும் கூறுகிறேன் எனக்கு இஸ்லாமியர்கள் யாரும் வாக்களிக்கவேண்டாம் என்று பேசினார்.
முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் பேசும்போது, வழக்கம் போல் ‘கட்டேங்கே தோ பட்டேங்கே (பிரிந்தால் இழப்பு)’ என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஜாட் சமூகத்தினர் அதிகமுள்ள அலிகரின் கேரில் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இடைத்தேர்தல் முடிவுகள் 23 ஆம் தேதி வெளியா கின்றன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *