திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா நவ.14 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கணிதப்பட்டதாரி ஆசிரியர் து.கவிதா வரவேற்புரையாற்றினார். பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவி எண்: 1098 விழிப்புணர்வு குறித்த வாழ்த்து மடலை மாணவிகளின் முன்னிலையில் வாசித்து மாணவிகளுக்கு குழந்தைகள் நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து குழுபாடல், குழுநடனம் மற்றும் நகைச்சுவை செய்திகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நிறைவாக தமிழாசிரியை மா.சந்திரா நன்றி கூறினார்.