திருப்பத்தூர், நவ.18- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 16.11.2024 அன்று மாலை 5 மணி அர்னால்ட் ஜிம் பெரியகுள மேடு அருகில் நடைபெற்றது.
இக் கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ. சிற்றரசன் தலைமையிலும், மாவட்ட இளைஞரணி தலைவர் சி. சுரேஷ்குமார் வரவேற்பிலும் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர், தே.பழனிசாமி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ப.அஜித், நகர இளைஞரணி செயலாளர் அக்ரி அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி மற்றும் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ.சிற்றரசன் தலைமை உரையாற்றினார்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நகர இளைஞரணி அமைப்பாளர் கா.நிரஞ்சன் வாசித்தார்
அத்தீர்மானங்கள் வருமாறு:
மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி, ஒன்றியம், கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கழக இளைஞரணி சார்பில் கழகக் கொடிகளை ஏற்றுவது. அமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக ஒன்றியம் தோறும் கிளை அமைப்புகளை அமைப்பது எனவும்,
கழக இளைஞரணி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தகவல் பதாகை அமைத்துத் தொடர்ச்சியாக எழுதுதல், துண்டறிக்கைப் பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் போன்ற பிரச்சாரங்களைத் தொடர்ச்சியாக செய்வது எனவும்,
நவம்பர் 24 இல் திருச்செங்கோட்டில் நடைபெறும் அய்ம்பெரும் விழாவிலும், நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் பெருந்திரளாக இளைஞர்கள் பங்கேற்பது எனவும்,
டிசம்பர் 2 இல் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் பிறந்த நாள் விழாவில் அய்யா அவர்களின் விருப்பப்படி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவது எனவும்,
டிசம்பர் 28,29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர், நாத்திகர், சுயசிந்தனையாளர் மாநாட்டில் பங்கேற்பது, மாநாட்டிற்கு நிதி திரட்டி தருவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற கழக பொறுப்பாளர்கள்: மாவட்ட துணைத் தலைவர் தங்க.அசோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தே.பழனிசாமி, கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் ரா.நாகராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.திருப்பதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.கற்பகவல்லி, சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் கே. இராஜேந்திரன், தொழிலாளரணி அமைப்பாளர் க.மோகன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ம.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் அக்ரி அரவிந்த், நகர அமைப்பாளர் கோ.முருகன், இளைஞரணி பொறுப்பாளர்கள் மோ.நித்தியானந்தம், மோ.வசிகரன், ம.சிறீதரன், க.இனியவன், க.உதயவன், பெரியார்செல்வம், பாவம் ஆகிய தோழர்கள் பங்கேற்றனர்.
காக்கங்கரை ஒன்றிய தலைவர் சி.சந்தோஷ் நன்றி தெரிவித்தார்.