தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சலால் 2 வாரத்திற்கு மேல் மக்கள் உடல் வலி, சளி, இருமலால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆய்வில், 75.4% இன்புளுயன்சா (Influenza) தெரியவந்துள்ளது. இதனால், பெரிய பாதிப்பு இல்லையென்றாலும் உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் டெங்கு, நிமோனியா ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.