டிசம்பர் 2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் சுயமரியாதை நாள் விழா! சிறப்பாக கொண்டாடுவது என சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு

Viduthalai
2 Min Read

சேலம், நவ.17- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 12.11.2024 அன்று காலை11.30 மணிக்கு சேலம் – ரெட்டிப்பட்டி போலீஸ் ராஜி இல்லத்தில் நடைபெற்றது.

தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமை வைத்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் 22.8.2024 அன்று சேலம் – கன்னங்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்ட வரவு– செலவு கணக்கு சரிபார்த்து ஏற்கப்பட்டது.

வரவு – செலவு விவரம் வருமாறு:

கடைவீதி பிரச்சாரம் மற்றும் நன்கொடை திரட்டல் 5,524
நன்கொடையாளர்கள் மூலம் – ரூ.12,000
மொத்த நன்கொடை வரவு – ரூ.17,524.
பொதுக்கூட்டச் செலவு – ரூ.12,920.
மீதமான தொகை – ரூ.4,604.
மீதமான தொகை ரூ.4,604 மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளது.

கூட்டத்தில், நவம்பர் 24 அன்று திருச்செங்கோட்டில் தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் அய்ம்பெரும் விழாவிற்குச் சேலம் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது எனவும்,
டிசம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் தோழர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
டிசம்பர் 2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள், –சுய மரியாதை நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது எனவும்,
சென்னை பெரியார் திடலில் நடை பெறும் பிறந்தநாள் விழாவில் தோழர்கள் கலந்துகொள்வது எனவும்,
தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 24 இல் மாநகரப் பகுதிகளில் கழகக் கொடி ஏற்றுவது எனவும்,
டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட துணைத் தலைவராக போலீஸ் ராஜியையும், துணைச் செயலாளராக இமயவரம்பனையும் இக்கமிட்டி தேர்வு செய்கிறது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள்:
தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா பாலு, மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி.பூபதி, மாவட்ட துணைத் தலைவர் போலீஸ் ராஜி, இளை ஞரணி தலைவர் தமிழர் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் பேங்க் ராஜி, உடையாபட்டி தோழர் சக்திவேல், புத்ரகவுண்டம்பாளையம் தோழர் செல்வம், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *