புதுடில்லி, நவ.16 இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் பறி முதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போதைப்பொருள் கட்டுப் பாட்டு அமைப்பு (NCB) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குஜராத்தின் போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் கப்பல் மூலம் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத்தம் பேட்டமைன் போதைப்பொருள் கைப் பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாகர் மந்தான்-4 என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, கடற்படை, குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவை இணைந்து ஈடுபட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில், ஈரான் நாட்டவர்கள் என கூறிக்கொள்ளும் 8 வெளி நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாக என்.சி.பி. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.