தென்காசி, நவ. 16- 10.11.2024 அன்று காலை 10 மணிக்கு கருஞ்சட்டை வீரர்கள் மறைந்த பெ.காலாடி, இரா.அய்யம்பெருமாள் ஆகியோரின் படத்திறப்பு தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தூத்துக்குடி மாவட்ட கழக காப்பாளர் சு.காசி தலைமை ஏற்று நடத்தினார் மாவட்ட செயலாளர் கோ முருகன் முன்னிலை வகித்தார்.
பெ.காலாடியின் படத்தை தென்காசி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை, இரா.அய்யம்பெருமாள் படத்தை நெல்லை மாவட்டத் தலைவர் இராசேந்திரன் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்டச் செயலாளர் கை. சண்முகம், குமரி மாவட்டத்தலைவர் மா.மு.சுப்பிரமணியன், குமரி மாவட்டச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன், நெல்லை மாவட்டச் செயலாளர் இரா வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தோழர்கள் பால்பிர பாகரன், அசோக், வழக்குரைஞர் சார்லஸ், செல்வம், சுஜித், சந்தனராஜ், கத்தார்பாலு, ஊர்காவலன், மோ.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
இறுதியில் கழக பேச்சாளரும் தூத்துக்குடி மாவட்டத் கழகக் காப்பாளருமான பால்இராசேந்திரம் பெ.காலடி, இரா.அய்யம்பெருமாள் ஆகியோரின் தியாகத்தையும் கழகத்தின் கொள்கைளை விளக்கி யும் சிறப்புரை ஆற்றினார்.
முடிவில் அப்பா பெ. காலாடி அவர்களின் மகன் கா.பழனிச் சாமியும் இரா.அய்யம்பெருமாள் அவர்களின் மகள் அபூங்குமார் அரசு நன்றியுரையாற்றினர்.
இந்நிகழ்வில் இரு குடும்பத்தைச் சேர்ந்த உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பயனாடைகள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கழகத்தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது.
இந்திகழ்வில் வழக்குரைஞர் திரவியம் மற்றும் இளைஞரணி கார்த்திகேயன், த.செல்வராசு, க.பாலமுருகன், நாகராசன், செல்லத் துரை, கந்தசாமி, ஆகியோர் மிகுந்த ஒத்துழைப்பு தந்து உதவினர்.