அதானிக்கு ஆதரவாக செயல்பட்ட மாதபியைப் காப்பாற்றும் பிரதமர் விசாரணைக்கு ஆஜாராக அழைப்பாணை அனுப்பவில்லை
புதுடில்லி, நவ. 16- பொதுக்கணக்குக் குழுக் கூட்டத்தில் ஆஜராவதில் இருந்து மாதபி புச் விலக்கு கேட்ட நிலையில், அந்த கோரிக்கையை ஏற்க கே.சி.வேணுகோபால் மறுத்துவிட்டார். கூட்டம் நடைபெறும் கடைசி நேரத்தில் சொந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக மாதபி புச் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மற்றொரு நாளில் ஆஜராக கே.சி.வேணுகோபால் அனுமதி அளித்தார்.
இந்த நிலையில், அடுத்த பொதுக் கணக்கு குழு கூட்டத்தில் ஆஜராக செபி தலைவருக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வருகின்ற நவ. 19ஆம் தேதி பொதுக் கணக்கு குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக மக்களவை வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த கூட்டத்தில் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்ட நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த நிலக்கரி அமைச்சக அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செபி தலைவர் மாதவி புச் அல்லது செபி உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதாக குறிப்பிடவில்லை.
மோடி – அதானி இருவருக்கும் உள்ள நெருங்கிய உறவினால் அதானி பெருத்த லாபம் ஈட்டி வருகிறார். அவரது நிறுவனத்திற்குச் சாதகமாக நடந்துகொண்டதாக மாதபி புச் மீது அமெரிக்க பொருளாதார புலனாய்வு அமைப்பு இரண்டுமுறை சான்றுகளோடு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய அரசு எந்த வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை
இந்த மோசடிக்கு செபி தலைவர் மாதபி புச் முக்கிய பங்கு வகித்தார் என்றும் கூறப்பட்டிருந்தது கடந்த மாதம் பொதுகணக்கு குழு விசாரணைக்கு அழைத்த நிலையில் கடைசி நிமிடத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டார்.
அவரது ஆதரவாக பாஜகவின் அனைத்து தலைவர்களும் பொதுக்கணக்கு குழுவின் முன்பு அவர் தனது விளக்கம் கொடுக்கத்தேவை இல்லை என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு அழைப்பாணை அனுப்பாமல் அவரை காப்பாற்றும் வேலையில் மோடி இறங்கியுள்ளார் என்பது தெளிவாகி விட்டது.