இன்று (15.11.2024) சென்னை மாவட்டம், புழல் இலங்கைத் தமிழர் முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வெளிநாடுவாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.