கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.11.2024

viduthalai
2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நோயாளிகளுடன் உதவிக்கு வரும் ஒரு நபருக்கு மட்டும் அடையாள அட்டை தரப்படும்.
*மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு; ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் அமல்: ஒன்றிய அரசு நடவடிக்கை

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அரசியல் சட்டத்தை உயிரைக் கொடுத்தேனும் காப்பேன்; பிரதமர் அரசியல் சட்டத்தை படிக்காத தால், அதன் உள்ளே ஒன்றும் இல்லை என்று மகாராட்டிரா தேர்தல் பரப்புரையில் ராகுல் பேச்சு.

*அரசு அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது”: புல்டோசர் நடவடிக்கை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறது தலையங்க செய்தி.

*அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடும் உயர்வு. கடந்த நான்கு மாதங்களை விட பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகம் என ஆய்வு அறிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜக ஆளும் ‘டபுள் என்ஜின்’ ஆட்சியின் அலங்கோலம்:உ.பி. அரசில் 125 பணியிடங்களுக்கு இரண்டரை லட்சம் பேர் விண்ணப்பித்தனர். பல இடங்களை அரசு அதிகாரி உறவினர்கள், மேனாள் சட்டப்பேரவைத் தலைவர், ஊழியர்கள், முதன்மைச் செயலாளர்களின் குழந்தைகள் அபகரிப்பு. ‘ஊழலுக்குக் குறைவில்லை… நூற்றுக்கணக்கானோர் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்’ என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அதானியின் தாராவி நில அபகரிப்புக்கு பாஜக ஏன் ஆதரவு அளிக்கிறது? மும்பைக்கான திட்டங்களை ஏன் குஜராத்திற்கு அளிக்கிறது? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

தி டெலிகிராப்:

*ஒரே நாளில் தேர்வுகளை நடத்த முடியாத பாஜக ஆட்சியினர் தான், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என பேசுகிறார்கள், புல்பூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அகிலேஷ் தாக்கு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*‘வாழ்க வளமுடன்’ – இந்தியாவில் இருந்து 2022இல் 5.6 லட்சம் இந்தியர்கள் பணக்கார நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *