8 இடங்களில் மகளிருக்கு சிறப்பான உடற்பயிற்சிக் கூடங்கள் சென்னை மாநகராட்சியின் பாராட்டத்தக்க செயல்

2 Min Read

சென்னை, நவ.15 சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது.

தமிழ்நாடு மக்கள் தொகையில் 48 சதவீதத்துக்கும் மேற்பட் டோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அந்த அளவுக்கு நகரப்புறங்கள் வளர்ச்சி அடைந்து வரு கின்றன. அதே நேரத்தில் பணி சுமை மற்றும் பணி சூழல் காரணமாக பெரும்பாலானோரால் காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. கட்டுடலை உருவாக்க ஆர்வம் உள்ள ஏழை இளைஞர்களுக்கு, தனியார் உடற்பயிற்சி கூடங் களின் கட்டணங்கள் எட்டாக்கனியாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 198 உடற்பயிற்சி கூடங்களை உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 6 மகளிருக்கான உடற்பயிற்சி கூடங்களாக இயங்கி வருகின்றன.

சென்னை மாநகராட்சி யில் மொத்தம் உள்ள 200 வார்டு உறுப்பினர்களில் 103 பேர் மகளிராக உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதனபடிப்படையில் மாநகராட்சி சார்பில் மேலும் 8 மகளிர் உடற் பயிற்சி கூடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உடல் ஆரோக்கியத்தில் தற்போது மகளிருக்கு அதிக விழிப் புணர்வும், ஆர்வமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் மகளிர் உடற் பயிற்சி கூடங்களின் எண் ணிக்கையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். அதன்படி, திரு.வி.க.நகர் மண்டலம், 68-வது வார்டு ஜவகர் நகரில் ரூ.42.20 லட்சத்திலும், கோடம்பாக்கம் மண்ட லம், 128-வது வார்டு இளங்கோநகர் சாலையில் ரூ.36.97 லட்சத்திலும் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 80, 81, 82, 85, 87, 195 ஆகிய வார்டுகளிலும் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன. ஒவ்வொரு உடற்பயிற்சி கூடமும் 46 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. ட்ரெட் மில் உள்ளிட்ட நவீன உப கரணங்களும் இடம்பெற உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *