பிற்படுத்தப்பட்டோருக்குத் தடைக்கல்!

1 Min Read

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும் கிரீமிலேயர் விவகாரத்தால் பணியில் சேருவதில் தடங்கல்
திமுக, காங். புகார்

புதுடில்லி, நவ.15- ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் பிற்படுத்தப் பட்டோருக்காக அமல்படுத்தப்படும் பல்வேறு சமூக நல திட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு(திமுக), மாணிக்கம் தாகூர்(காங்கிரஸ்),ராமசங்கர் ராஜ்பர்(சமாஜ்வாடி) ஆகியோர், கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஓபிசி பிரிவை சேர்ந்த பலர் பணியில் சேருவதற்கு கிரீமிலேயர் தடைக்கல்லாக இருக்கிறது என்றும்,கிரீமி லேயர் நிலையை உறுதி செய்வதில் அதிக தாமதம் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிடுகையில், பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழ்நிலையை கணக்கில் கொண்டு கிரீமிலேயர் வரம்பில் அரசு மாற்றம் கொண்டுவரவில்லை. ஓபிசி மக்களுக்கு யார் துரோகம் செய்கிறார்கள்? என புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *