ஜெனீவா, நவ.15 காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நட வடிக்கைகள் இன அழிப்பை ஒத்துள்ளதாக அய்.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்தக் குழு தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், ‘போா் தொடங்கியதிலிருந்தே பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கக்கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்பது, பாலஸ்தீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது, அவா்கள் உயிா்வாழ முடியாத சூழலை வேண்டுமென்றே ஏற்படுத்துவது என இஸ்ரேலின் அனைத்து நடவடிக்கை களும் இன அழிப்புக்கான வரையறைகளை நிறைவு செய்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘காஸாவில் இஸ்ரேல் இனஅழிப்பு’
Leave a comment