புதுடில்லி, நவ.14 ‘புல் டோசா் நடவடிக்கைக்கு எதி ரான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சிக்கு முடிவுகட்டும்’ என்று எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதேபோல், உத்தரப்பிரதேசத் தில் ஆளும் பாஜக தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் தீா்ப்பை வர வேற்றுள்ளது.
‘குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்கும் ‘புல்டோசா்’ நட வடிக்கை சட்டவிரோதமானது’ என்று நேற்று (13.11.2024) தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
இது தொடா்பாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை காங் கிரஸ் வரவேற்கிறது. இது, உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சிக்கு முடிவுகட்டும்’ என்றார்.
சமாஜ்வாதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதி வில், ‘புல்டோசா் நடவடிக்கை, முற்றிலும் அநீதியானது; நியாயமற்றது; அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தங்களை கடவுளின் அவதாரமாக கருதி, அரசை நடத்தும் திறனற்ற-பயனற்ற ஆட்சியாளா்களின் முகத்தில் விழுந்த அறை’ என்று கூறப்பட்டுள்ளது.