சென்னை, நவ.14- இந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு அமைப்பாகிய பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடமிருந்து மக்கள் தொடர்புத் துறைக்கான தேசிய விருதினை தட்டிச் சென்றது, சென்னையைச் சேர்ந்த கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனம்.
பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு, அண்மையில் (9.11.2024 அன்று) கருநாடக மாநிலம், மங்களுருவில், தனது 14-ஆவது விருது வழங்கும் விழாவையும், தேசிய மாநாட்டையும் நடத்தியது. இதில் மக்கள் தொடர்புத் துறையில் தேசிய அளவில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு டிஜிட்டல் பப்ளிஷிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிறுவனம், மக்கள் தொடர்புத் துறை சார்ந்த நூறு கட்டுரைகளை (BLOGS) இணையதளத்தில் வெளியிட்டு இத்துறை சார்ந்த விழிப்புணர்வை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் சென்று சேர்த்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவுத் தலைவர் ப.அமர்நாத், கருநாடக மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.கிருஷ்ண பட்-டிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பினுடைய நிறுவனர்
எம்.பி.ஜெயராம், தலைவர் கீதா சங்கர், மும்பை கே. பி. பாபா மருத்துவமனையின் மருத்துவர் மமதா லாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த அமைப்பு 50-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுக்கான விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. அதில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் தங்களது சிறந்த பணிகளை விருதுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
அவற்றிலிருந்து, வெகு சில நிறுவனங்களுக்கே இவ்விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் டிஜிட்டல் பப்ளிஷிங் துறையில் வெண்கலப் பதக்கம், கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த அமைப்பிடமிருந்து விருதினைப் பெறும் – தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரே மக்கள் தொடர்பு நிறுவனம், கேட்டலிஸ்ட் பி.ஆர். தான் என்பது குறிப்பிடத்தக்கது.