டெக்கான் கிரானிக்கல், சென்னை
சட்டத்தின் ஆட்சி தான் நடத்த வேண்டும்; புல்டோசர் முறையில் அல்ல, உ.பி. யோகி சாமியார் அரசுக்கு குட்டு; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
இனி உ.பி.யில் புல்டோசர்கள் குப்பைக் கிடங்கில் கிடத்தப்படும், அகிலேஷ் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
எதிர்க்கட்சி மாநிலங்களை முடக்க நினைக்கிறார் பிரதமர் மோடி. குஜராத்தில் முதலீடுகளை திசை திருப்புகிறார் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு.
யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிப் பெற்றாலும் ஓபிசி சான்றிதழ் சரிபார்ப்பு என்று கூறி, ஒன்றிய பணியாளர் நலத்துறை பணி நியமனம் தருவதில்லை; நாடாளுமன்ற ஓபிசி குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், டி.ஆர்.பாலு, ரமா சங்கர் ராஜ்பர் ஆகியோர் ஒன்றிய சமூக நலத்துறைக்கு கண்டனம்.
தி இந்து
நாட்டின் சுதந்திரப் போராட்டம், ஒற்றுமையில் பா.ஜ.க. மற்றும் அதன் கொள்கை வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுக்கு எந்தப் பங்கும் இல்லை. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு.
தி டெலிகிராப்
மக்களவையில் 400 இடங்கள் வேண்டும் என்று நரேந்திர மோடி விரும்பினார். ஏனெனில், அரசியல் சட்டத்தைத் திருத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது: சரத்பவார் குற்றச்சாட்டு.
“சொந்தக் காலில் நிற்க முயற்சி செய்யுங்கள், சரத் பவாரின் ஒளிப்படத்தை பயன்படுத்த வேண்டாம்”: அஜித் தலைமையிலான என்சிபி அணியிடம் உச்சநீதிமன்றம் அறிவுரை.
மீண்டும் வன்முறையால் பதற்றம் – மணிப்பூருக்கு மேலும் 20 கம்பெனி துணை ராணுவப் படை விரைவு.
நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்ட நிதிஷ் குமார்; அவருக்கு இது ஒன்றும் புதிது அல்ல, தேஜஸ்வி கிண்டல்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கிரீமிலேயர் நிபந்தனைகளை தாமதமின்றி சரிசெய்யவும், ஓபிசி நாடாளுமன்ற குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்.
– குடந்தை கருணா