திருவாரூர், நவ.14- திருவாரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் அரங்க.ஈவேரா தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் சவு.சுரேஷ், நன்னிலம் பகுத்தறிவாளர் கழகத்தின் தலை வர் எஸ்.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.சிவக் குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் கழக சொற்பொழி வாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, நன்னிலம் கழகத் தலைவர் இரா.தன்ராஜ், திருவாரூர் நகரச் செயலாளர் ப.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கோ.பிளாட்டோ, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் ப.வேதமூர்த்தி, வ.நாகராஜன், பி.விஜயகணேஷ், ஆ.சாமிநாதன், ஆர்.பிரபாகரன், ஆர்.திருநிறைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திருவாரூரில் பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் நடை பெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா வரவு செலவுகள் ஏற்பு அளிக்கப்பட்டது எனவும்,
நவம்பர் 26 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாத இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் திராவிடர் கழகத்துடன் இணைந்து ஏராளமான பகுத்தறிவாளர் கழக தோழர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்து பெரியார் உலகத்திற்கு நன்கொடைகள் வழங்குவது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது எனவும்,
டிசம்பர் 28, 29 தேதிகளில் திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பகுத்தறிவாளர் கழக தோழர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இம்மாநாட்டிற்கு மாவட்டத்தின் சார்பில் நிதி வசூல் செய்து வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
வசூல் பணிகளை மேற்கொள்ள மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரங்க.ஈவேரா தலைமை யில் மாவட்ட கழக தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் கழக அமைப்பாளர் வீ.மோகன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட கழக செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட கழக துணைத் தலைவர் கி.அருண் காந்தி, மேனாள் மாவட்ட ப.க தலைவர் இரா.சிவக்குமார், நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் எஸ்.கரிகாலன், ஒன்றிய கழக தலைவர் இரா.தன்ராஜ், திருவாரூர் நகரத் தலைவர் கா.சிவராமன், நகரச் செயலாளர் ப.ஆறுமுகம் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கூட்டத்தில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ரத்தின சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.