சென்னை நவ 14 சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரியில், ஹிந்து மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட் டுள்ளனர்.
தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த தலையீடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் மதம் சார்ந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரும் சலசலப்பை கிளப்பியிருந்தது. பள்ளியின் சார்பில் ஆண்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு பேச் சாளராக மகாவிஷ்ணு அழைக்கப்பட்டிருந்தார். இவர் பரம்பொருள் பவுன்டேஷனை நடத்தி வரும் ஆன்மிக சொற் பொழிவாளராக அறியப்படுகிறார்.
அறிவியலையும், ஆன்மிக கருத்துக்களையும் இணைத்து, அதன் மூலம் பிற்போக்கு கருத்துக்களை பேசி ஏமாற்றி வருகிறார் என்று இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்படி இருக்கையில் மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் சர்ச்சையாகியிருந்தது. இதை தடுக்க முயன்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் இவர் எதிர் கேள்வி கேட்டு முடக்கியிருந்தார். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
இதனையடுத்து மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டு அவரை காவல்துறை யினர் கைது செய்தனர். அரசு பள்ளிகளிலும், கல்லூரி களிலும் தொடர்ச்சியாக மதம் சார்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தது.
இப்படி இருக்கையில், தற்போது சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் ஹிந்து மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய மாணவர்கள் சங்கம் (SFI) மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர் களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதாவது மீனாட்சி கல் லூரிக்கு அருகில் காளிகாம்பாள் கோயில் இருக்கிறது. இக் கோயிலில் நிகழ்ச்சி நடத்த பெங்களூரை மய்யமாக கொண்ட ஆசிரமத்தை சேர்ந்த சிறீ விதுஷேக்ரா பாரதி வரவழைக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் கோயில் நிகழ்ச்சி முடிந்ததும், அவரை வைத்து கல்லூரியிலும் நிகழ்ச்சி களை நடத்த நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதில் மாணவிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியிருந்தது. அப்படி பங்கேற்காவிடில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்றும் பேராசிரியர்கள் சார்பில் மிரட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாணவி களை மிரட்டும் தொனியில் பேசிய ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது.
அந்த ஒலிப்பதிவு, “மாணவிகள் அனைவரும் 12ஆம் தேதி மண்டபத்தில் ஒன்றுகூட வேண்டும். அங்கு வருகைப்பதிவு எடுக்கப்படும். அனைவரும் கட்டாயமாக வர வேண்டும் என செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி முடிய தாமதமாகும் என்பதால் பெற்றோரை அழைக்க வர சொல்லி விடுகங்கள். வரவில்லை எனில் தேர்வு முடிவுகளை வெளியிட மாட்டார்கள். என்றோ ஒருநாள் தானே உங்களை அழைக்கிறார்கள். அன்று கூட உங்களால் வரமுடியவில்லை எனில் அப்புறம் என்ன? மற்ற மதத்தை சேர்ந்த மாணவிகள் காரணம் சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஹிந்து மதத்தை சேர்ந்த மாணவிகள் வரவில்லை எனில் நாளை அதன் பின் விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்” என பேரா சிரியை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.