மும்பை, நவ.13 மகாராட்டிராவின் யவத்மால் விமான நிலையத்தில் உத்தவ் தாக்கரே பைகளை சோதனையிட்டது வழக்கமான நடைமுறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராட்டிர சட்டப் மன்றத்திற்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில்,
“தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் உத்தவ் தாக்க ரேவின் பைகள் கடந்த 2 நாட்களில் 2 முறை சோதனை செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பிரச்சாரத்திற்கு செல்லும் போது அவர்களின் பைகள் இதுபோன்று சோதனை செய்யப்படுகின்றனவா என அறிய விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக குறிவைக்கிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்” என்றார்.
இப்புகார் குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், “யவத்மால் விமான நிலையத்தில் உத்தவ் தாக்கரேவின் பைகள் சோதனையிடப்பட்டன. இது வழக்கமான நடைமுறை. வழக்கத்தில் உள்ள நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றுகின்றனர்” என்று தெரிவித்தன. ஆனால் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் ராஜமரியாதை செய்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த இரட்டை நிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் உததவ் தாக்கரேவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்