சென்னை, நவ. 13- வடசென்னை மவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10.11.2024 அன்று மாலை 4 மணியளவில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.
மாவட்ட ப.க. செயலாளர் ஏஜஸ் ஹுசைன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட ப.க. தலைவர் இரா.சண்முக நாதன் தலைமை வகித்தார்.
மாநில ப.க. அமைப்பாளர் கோவி.கோபால், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன், செயலாளர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் 2024 – டிசம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சி மாநக ரில் நடைபெறும் அகில இந்திய பகுத் தறிவாளர் மாநாட்டிற்கென நிதி வசூல் பற்றியும், மாநாட்டுப் பிரச்சாரப் பணிகள் குறித்தும், மாவட்டத்திலிருந்து பெருந்திரளாகத் தோழர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டியது பற்றியும் விளக்கமாகப் பேசினர்.
மாநில திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் பா.இராமு, அயன்புரம் சு.துரைராசு, கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, ஓட்டேரி சி.பாசுகர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு மாநாடு குறித்துப் பேசினர்.
மாநில ப.க. பொறுப்பாளர்கள் குறிப்பிட்டவாறு மாநாடு குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
நிறைவாக வடசென்னை மாவட்ட ப.க. தோழர் சந்திரவதனி நன்றி கூறினார்.