செங்கல்பட்டு, நவ. 13- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10.11.2024 காலை 10.30 மணிக்கு இளங்குயில் மழலையர் பள்ளி சிங்கப்பெருமாள் கோயிலில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. மு.பிச்சைமுத்து (மாவட்ட அமைப்பாளர்) வரவேற்புரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழகத்தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் 2022ஆம் ஆண்டு நடந்த 12ஆவது FIRA வின் அகில இந்திய மாநாட் டினை நினைவுகூர்ந்ததுடன் வரும் டிசம்பர் மாதம் 28-29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறவிருக்கும் 13ஆவது அகில இந்திய FIRA மாநாடு குறித்தும் விளக்கிப் பேசினார்.
அதனைத்தொடர்ந்து மு.கலைவா ணன் (தலைவர், பகுத்தறிவாளர் கழக கலைத்துறை) மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன், பூ.சுந்தரம் (தலைவர் மாவட்ட திராவிடர் கழகம்) கருத்துரை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் சே.சகாயராஜை மாவட்ட துணைத் தலைவராக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் அறிவித்ததுடன் திருச் சியில் நடக்கவிருக்கும் FIRA மாநாட் டின் செங்கல்பட்டு மாவட்ட ஒருங் கிணைப்பாளராகவும் நியமித்தார்.
FIRA மாநாட்டிற்கு பெருந்திரளான தோழர்கள் பங்கேற்பதென்றும் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் அ.பா கருணாகரன் பொதுக்குழு உறுப்பினர்,. மு.செம்பியன் மாவட்ட கழக செயலாளர், மு. அருண்குமார் கழக இளைஞர் அணி, ஆ.யாகோப்பு, கழக மா.சமத்துவமணி தலைவர் திருவள்ளுவர் மன்றம், ம.வெங்கடேசன் நகரத் தலைவர், ப. முருகன் நகரச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை வழங்கினர். வசந்தன் புதிதாக கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இறுதியில் புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட சே.சகாயராஜ் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.