அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோளை ஏற்க உச்சநீதிமன்றம் தடை

Viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.13 இனி அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோள் விடுப்பதை ஏற்க தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் 2025 மே 13-ஆம் தேதி முடிவடையும் நிலையில், அவர் 6 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார்.
ஏற்கனவே புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வெளியிட்ட தனது முதல் அறிக்கையில்
“நீதித்துறை என்பது ஆளும் அமைப்பின் ஒருங்கிணைந்த அதே நேரத்தில், தனித்துவமான மற்றும் சுதந் திரமான அமைப்பாகும். அரசமைப்பு நம்மீது நம்பிக்கை வைத்துள்ளது. அரசமைப்பு பாதுகாவலரின் பங்கு என்பது, அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் நீதி வழங் குபவராகவும் இருத்தல் என்ற முக்கியமான பொறுப்பினை நிறைவேற்றுவதே.

அனைவரையும் சமமாக நடத் துவதன் அடிப்படையில் நீதி வழங்கும் கட்டமைப்பில் செல்வம், தகுதி மற்றும் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் வெற்றிபெறும் வகையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் பக்கச்சார்பு இல்லாத தீர்ப்பு ஆகியவைகள் தேவைப்படுகின்றன. இவை நமது அடிப்படைக் கொ ள்கைகளைக் குறிக்கிறது. எங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பானது, குடிமக்களின் உரிமைகளை பாதுகாப் பவர்களாகவும், சர்ச்சைகளைத் தீர்ப்பவர்களாகவும் எங்களின் உறுதிப் பாட்டை வலியுறுத்துகிறது.
நமது நாட்டில் அனைத்து குடிமக் களுக்கும் எளிதாக நீதி கிடைக்க செய்வது நமது அரசலமைப்பின் கடமையாகும். குடிமக்களுக்கு புரியும் படியான தீர்ப்பினை வழங்குவது மற்றும் சமரசத்தை ஊக்குவிப்பது ஆகியவையே முன்னுரிமையானது” எனத் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, “இனி வழக்குகளின் அவசர விசாரணைக்கு வாய்மொழி கோரிக்கைகளுக்கு அனுமதி இல்லை. அவை தடை செய்யப்படுகின்றன. மாறால்க மின்னஞ்சல் அல்லது எழுத்துபூர்வமான கடிதம் அளிக்கப்பட வேண்டும். அதில் அவசர தேவைக்கான காரணங்களை மட்டும் கூறிப்பிட்டால் போதும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *