காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
ராஞ்சி,நவ.12- மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப் பதையும், ஆடுகளைப்போல சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கு வதையும் பிரதமர் மோடி விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
ஜார்கண்ட் மாநில சட்ட சபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. இதற்காக அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகின்றன. அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தலைநகர் ராஞ்சியில் நடந்த பிரசாரக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதலமைச்சர் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.
தனது பிரச்சார உரையில் கார்கே கூறியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதிலேயே பிரதமர் மோடி நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குகிறார். இவ்வாறு வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்களை அவர் ஆடுகளைப்போல பாதுகாத்து, அவற்றுக்கு உணவு கொடுத்து பின்னர் அடித்து விருந்து வைக்கிறார். அதுதான் மோடி. மோடி, தான் உயிரியல் ரீதியாக பிறக்காதவர் என நம்புகிறார். தனது வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றாத ஒரு வழக்கமான பொய்யர். குஜராத்தில் ஏதேனும் பொற்காலம் வந்ததா?
4 பேர் நாட்டை ஆள்கிறார்கள்
முதலமைச்சராகவும், பிரதமராகவும் அவரை 25 ஆண்டுகள் நாம் பொறுத்துக் கொண்டோம். பிற்படுத்தப்பட்ட மக்களையும் பெண்களையும் சுரண் டுபவர்களை அவர் ஆதரிக்கிறார். மணிப் பூருக்கு செல்ல அவருக்கு துணிச்சல் இருக்கிறதா? என சவால் விடுகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சி.பி.அய். மற்றும் பிற விசாரணை அமைப்புகளை மோடியும், அமித்ஷாவும் கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் நாங்கள் அஞ்ச வில்லை. சுதந்திரத்துக்காக போராடினோம், உயிர்த் தியாகம் செய்தோம். இன்று 4 பேர் தான் நாட்டை ஆள்கிறார்கள். அதாவது மோடி, அமித்ஷா, அதானி மற்றும் அம்பானி ஆகியோர்தான் நாட்டை நடத்துகிறார்கள்.
ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்
நானும், ராகுல் காந்தியும் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கிறோம்.
மக்களை பிரித்தாள யோகி ஆதித்ய நாத் விரும்புகிறார். ஒரு உண்மையான யோகி, பிரிவினை மொழிகளை பேச மாட்டார். இது பயங்கரவாதிகளின் மொழி ஆகும். யோகி ஒரு மடத்தின் தலைவர், காவி உடைகளை அணிகிறார். ஆனால் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை கைதிகளில் ஒருவரை சோனியா காந்தி மன்னித் தார். பிரியங்காவோ அவரை கட்டித்தழு வினார். இதுதான் கருணை ஆகும்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.