பெரம்பலூர், நவ.12- பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் மருத்துவர் குணகோமதி இல்லம் வளாகத்தில் பெரியார் பேசுகிறார் மூன்றாவது மாதாந்திரக் கூட்டம், மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
பெரம்பலூர் மாவட்ட தலை வர் சி.தங்கராசு தலைமையில், மாவட்ட செயலாளர் மு.விச யேந்திரன் வரவேற்புரையில் அரசமைப்புச் சட்ட எரிப்பு ஏன்? என்ற தலைப்பில் கூட்டம் நடை பெற்றது.
இந்நிகழ்வில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முது நிலை தமிழாசிரியர் சபா.சிலம்பரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், நகரத் தலை வர் அக்ரி ஆறுமுகம், மாவட்ட மகளிரணி தலைவர் மருத்துவர் குணகோமதி உள்ளிட்ட பலர் முன்னிலை வைத்தனர்.
அதன் பின்னர் டிசம்பர் 28, 29 தேதியில் திருச்சியில் நடைபெற இருக்கின்ற மாநாட்டிற்கான நிதி திரட்டுதல் தொடர்பாக பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பெ.நடராசன் தலை மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பகுத்தறிவாளர் கழகம் பொதுச்செயலாளர் தமிழ்ப்பிரபாகரன், மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, ஆகியோர்கள் கலந்து கொண்ட னர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சு.அறிவன் தலை மையில், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழரசன் வரவேற்புரையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறவைாக திரா விடர் கழக வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சின்னசாமி நன்றி உரையாற்றினார்.