புவனேஷ்வர், நவ.12 புதிய கல்வி கொள்கையை மோடி அரசு 2017ஆம் ஆண்டு அறிவித்த போதிலும் பாஜக ஆளாத மாநிலங்களும் பாஜக விற்கு ஆதரவான சில மாநிலங்களும் அக்கொள்கையை தங்களது மாநிலத்தில் ஏற்காமல் இருந்தன. இதில் ஒடிசா மாநிலமும் ஒன்று ஆகும்.
ஒடிசாவில் 25 ஆண்டுகளாக ஆட்சி யில் இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை பிரிவினை வாதம் பேசி முடிவிற்கு கொண்டுவந்தது பாஜக. தற்போது அங்கு பாஜக ஆட்சியில் உள்ளது.
இத்தனை ஆண்டுகளாக நவீன் பட்நாயக் பாஜகவிற்கும் மோடிக்கும் நாடாளுமன்ற இருஅவைகளிலும் ஆதரவாக இருந்த போதும் பாஜகவின் பல்வேறு திட்டங்களை நடைமூறைக்கு கொண்டுவர மறுத்து வந்தார்.
இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு பல்வேறு மதவாத திட்டங்களை பாஜக அரசு உடனுக்கு உடன் அமல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுபுதிய கல்விக்கொள்கை. இது தொடர்பாக ஒடிசா அரசு வெளியிட் டுள்ள அறிக்கையில்,
”தேசிய கல்விக் கொள்கையின்படி (NEP 2020) உயர்கல்வி முறையை மிகவும் தரமானதாகவும், தன்னாட்சி மற்றும் உள்ளடக்கியதாகவும் மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டு படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும். இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நிறைவு செய்த பிறகு, டிப்ளமோ, பட்டம் மற்றும் கவுரவ பட்டம் ஆகிய சான்றிதழ்களை பெறலாம்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) வழிகாட்டுதல்களின் அடிப் படையில் மாநில அரசு கூடுதல் தகுதிகளுக்கான கட்டமைப்பை உரு வாக்கியுள்ளது. இதன் கீழ் மாணவர்கள் திறன் மேம்பாடு, பணிப் பயிற்சி, சமூக சேவை மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ். போன்ற கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம்.
மாணவர்களே தங்கள் பாடங்களை தேர்வு செய்யவும், ‘இடைநிற்றல், மீண்டும் சேருதல்’ விருப்பத்தை பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குள் பட்டப் படிப்பை முடிக்கவும் இந்த திட்டம் உதவும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மாணவர்கள் விருப்பமில்லை என்றால் பள்ளிக்கோ /கல்லூரிக்கோ வரத்தேவையில்லை. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கல்லூரி அல்லது பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என்பது புதியக் கல்விகொள்கையின் ஒரு விதி ஆகும். இதற்கு பாஜக ஆதரவு கல்வியாளர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தனியார் பள்ளியில் அரசுபள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் சேர விரும்பினால் அவர்களது கட்டணத்தை அரசே கொடுக்கும் என்றும் புதிய கல்விகொள்கையில் உள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பல மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு கொடுக்கவில்லை. இதனால் மாணவர்களை தனியார் பள்ளிகள் வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர் –- இது தொடர்பான பல செய்திகள் தினமும் நாளிதழ்களில் வந்துகொண்டுதான் இருக்கிறது.