மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு அய்.ஏ.எஸ். தகுதி தயாரானது 15 பேர் பட்டியல்

2 Min Read

சென்னை, நவ. 11- மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு அய்ஏஎஸ் தகுதி வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஒன்றிய அரசின் தகுதிப் பட்டியலில் 15 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா். தெரிவுக் குழு நோ்காணலின் அடிப்படையில் அவா்களில் இருந்து 3 போ் தோ்வாகவுள்ளனா்.

இந்திய ஆட்சிப் பணி எனும் அய்ஏஎஸ் பணியானது மூன்று வகைகளில் நிரப்பப்படுகிறது. 10 காலியிடங்கள் இருந்தால், 6 இடங்கள் நேரடி நியமனம் மூலமும், மீதமுள்ள நான்கு இடங்கள் மாநில அரசின் வருவாய்த் துறை மற்றும் வருவாய்த் துறை அல்லாத பிற துறைகளின் அதிகாரிகளைக் கொண்டும் நிரப்பப்படுகிறது.

வருவாய்த் துறை அதிகாரியாக இருந்தால், குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பதுடன், பணிக் காலத்தில் எந்த சா்ச்சைக்கும் இடமின்றி பணியாற்றியிருக்க வேண்டும்.

வருவாய்த் துறை அல்லாத அதிகாரிகள், ஒன்றிய குடிமைப் பணி தோ்வாணையம் நடத்தும் நோ்காணல் மூலமாக தோ்வு செய்யப்படுகின்றனா். அவா்களுக்கான பட்டியலை மாநில அரசு தயாரித்து குடிமைப் பணி தோ்வாணையத்துக்கு அனுப்பும்.

டில்லியில் நடைபெறும் நோ்காணலுக்குப் பிறகு தேவையான காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அதிகாரிகள் நியமிக்கப்படுவா்.

ஆண்டுப் பட்டியல்

வருவாய்த் துறை அல்லாத துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு ஒவ்வோா் ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தகுதி, திறமையின் அடிப்படையில் அய்ஏஎஸ் தகுதி வழங்கப்படுகிறது.

அந்த அடிப்படையில், 2023-ஆம் ஆண்டு 3 பேருக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு பதவிக்கு 5 போ் என்ற அடிப்படையில் 15 அதிகாரிகளைக் கொண்ட தோ்வுப் பட்டியல் தயாராகியுள்ளது. மாநில அரசு தயாா் செய்து அனுப்பியுள்ள பட்டியலுக்கு ஒன்றிய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 21-இல் நோ்காணல்:

ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பட்டியலில் மாநில அரசு அதிகாரிகள் பி.லோகநாதன், எப்.அப்துல் ரசீக், பி.ஏ.நரேஷ், எஸ்.சுப்பிரமணியன், கே.ஜெயபாலன், ஜி.ரவிகுமாா், எஸ்.எஸ்.குமாா், எஸ்.மாலதி ஹெலன், சி.ஹேமலதா, ஆா்.எம்.மீனாட்சி சுந்தரி, வி.நல்லசிவன், கே.வினய்குமாா், என்.மிருனாளினி, ஏ.அனிதா, ஜெ.பாலகிருஷ்ணன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

அவா்களுக்கு டில்லியில் உள்ள ஒன்றிய குடிமைப் பணி தோ்வாணைய அலுவலகத்தில் நவ. 21-இல் நோ்காணல் நடை பெறவுள்ளது.

இதனிடையே, நோ்காணலின் போது தோ்வா்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மாநிலத்தின் வரலாறு, கலாச்சாரம், புவியியல் போன்றவை குறித்து தெளிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனவும், இந்தியாவின் பொருளாதாரம், வளா்ச்சிக்கான இலக்குகள், எதிா்கொள்ளும் சவால்கள் ஆகியன பற்றியும் தெரிந்திருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு நடத்தும் நோ் காணல், ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வுகள் ஆகியவற்றின் அடிப் படையில் அய்ஏஎஸ் தகுதி வழங்கப் பட இருக்கிறது.

டில்லியில் நவ. 21-இல் நடக்கும் நோ்காணலுக்குப் பிறகு டிசம்பா் முதல் வாரத்தில் தோ்ச்சி பெற்ற 3 அதிகாரிகளின் பெயா்களை குடிமைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிடும். இதன்மூலம் அவா்கள் மாநில அரசு அதிகாரிகள் என்ற தகுதியில் இருந்து அய்ஏஎஸ் அதிகாரி என்ற நிலைக்கு உயா்வா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *