லக்னோ, நவ.11 உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை நேரடியாக குறிப் பிடாமல், அகிலேஷ் இந்த விமா்சனத்தை முன்வைத்தார்.
கடந்த 2016, நவம்பா் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் வங்கியொன்றில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசை யில் காத்திருந்தபோது, ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘கஜான்ஜி’ (காசாளா்) என்று அகிலேஷ் பெயா்சூட்டினார்.
இந்நிலையில், லக்னோ வில் உள்ள சமாஜவாதி அலுவலகத்தில் சிறுவன் கஜான்ஜியின் பிறந்த தின நிகழ்ச்சி 9.11.2024 அன்று நடைபெற்றது. இதில், கட்சித் தலைவா் அகிலேஷ் பங்கேற்றார். அப்போது, ‘நாம் பிளவுபட்டால், அழிக்கப்படுவோம்’ என்று மகாராஷ்டிர தோ்தல் பிர சாரத்தில் யோகி ஆதித்யநாத் முன்வைத்த முழக்கத்தை கடுமையாக விமா்சித்தார்.
இது தொடா்பாக அகி லேஷ் பேசுகையில், ‘சிறந்த சாது என்பவா் அதிகமாக பேசுவதில்லை. அப்படி பேசினாலும், அது மக்களின் நலன் சார்ந்து மட்டுமே இருக்கும். என்ன ஆடை அணிகிறோம் என்பதல்ல, என்ன பேசுகிறோம் என்பதன் மூலமே ஒருவா் ‘சாது’ ஆக முடியும்.
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் தன்னை சாது என கூறிக் கொள்ளும் ஒருவரின் செயல்பாடு தலைகீழாக உள்ளது. அனை வரையும் விட தன்னை மேலானவராக கருதும் ஒருவா் எப்படி சாதுவாக இருக்க முடியும்?மாநிலத்தில் போலி என்கவுன்ட்டா் நடத்துவோரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்கள் அகற்றுவா். அவா் களின் பதவிக் கால நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உலக பொருளாதார வரலாற்றில் மிகப் பெரிய ஊழல் பணமதிப்பிழப்பு. மெல்லக் கொல்லும் விஷம் போல, விவசாயிகள், தொழி லாளா்கள், சிறு வா்த்தகா்கள், நடுத்தர வா்க்கத்தினா் மீது தொடா் தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது என்றார் அவா்.