மும்பை, நவ.11 தட்கல் பயணச்சீட்டு முன் பதிவு செய்யும்போது, அய்ஆர்சிடிசி செயலி செய லிழப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், அதிகளவிலான பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வழித்தடங்களில்கூட முகவர்களுக்கு(டிராவல் ஏஜெண்ட்) எளிதாக தட் கல் பயணச்சீட்டுகள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப் படுவதற்கு முந்தைய நாள், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை இந்திய ரயில்வேவில் உள்ளது. இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், அய்ஆர்சிடிசி வலைதளம் அல்லது அலைபேசி செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும். குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் இணைய வழியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது.
அதிகாரப்பூர்வ தகவலின் படி, ரயிலில் பயணம் செய்வதற்காக 80 சதவிகித பயணச்சீட்டுகள் இணைய வழியின் மூலமே முன்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலை யில், அய்ஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ அலைபேசி செயலியை, தட்கல் முன்பதிவு நேரத்தில் அதிகளவிலானோர் நாடுவதால், உள்ளே நுழைவ தில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு அய்ஆர்சிடிசி செயலியின் திறனை இந் திய ரயில்வே நிர்வாகம் மேம்படுத்தியது. ஆனால், கடந்த சில மாதங்களாக மீண்டும் தட்கலின்போது செயலிகள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் சத் பூஜை காலத்தில் இதுபோன்ற புகார்கள் அதிகளவில் வந்ததை அய்ஆர்சிடிசி அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும், அதிகளவிலானோர் குறிப் பிட்ட நேரத்தில் செயலியை பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சினை ஏற்பட் டதாகவும், இதனை சமாளிக்க சம்பந்தப்பட்ட குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
இருப்பினும், கடந்த 4 மாதங்களில் வெவ்வேறு பயணங்களுக்காக 5 முறை தட்கல் பயணச்சீட்டு முன் பதிவு செய்ய முற்பட்ட தாகவும், அப்போது ஒரு முறையாவது செய லியில் இருந்து வெளி யேற்றப்பட்டதாகவும், மீண் டும் உள்நுழைந்து சரியான தகவல்களை அளித்தாலும் தவறு என செய்தி காட்டு கிறது. “அதிதிறன் கொண்ட இணையத்தைப் பயன்படுத்தி தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முயற்சித்த போதும், காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது. ஆனால், முகவர்களால் மட்டும் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் கூட இரண்டு மணிநேரம் காத்திருந்துதான் தட்கல் பயணச்சீட்டு பெற முடிகிறது, ரயில் நிலைய அலுவலத்தில் கூட அய்ஆர்சிடிசி இணைய தளத்தில் பிரச்சினை ஏற் படுகிறது.