புதுடில்லி, நவ.11 உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்!
தோ்தல் நிதிப் பத்திரத் திட்டம், சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீா்ப்பளித்த அமா்வில் நீதிபதி சஞ்சீவ் கன்னா இடம்பெற்றிருந்தார். உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பா் 9 ஆம் தேதிமுதல் பதவிவகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று (10.11.2024) ஓய்வுபெற்றார். முன்னதாக அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனத்துக்கான பரிந்து ரையை அனுப்புமாறு டி.ஒய்.சந்தி ரசூட்டிடம் ஒன்றிய சட்டத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்பேரில், தனக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவின் பெயரை பரிந்துரைத்து டி.ஒய்.சந்திரசூட் கடிதம் அனுப்பினார்.
51 ஆவது தலைமை நீதிபதி: டி.ஒய்.சந்திரசூட்டின் பரிந்துரையை ஏற்று மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் நியமனத்துக்கு குடி யரசுத் தலைவா் திரவுபதி முா்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.
குடியரசுத் தலைவா் மாளிகை யில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் சஞ்சீவ் கன்னாவுக்கு குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் குடி யரசுத் துணைத் தலைவா், பிரத மா், ஒன்றிய அமைச்சா்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனர்
அடுத்த ஆண்டு மே 13 ஆம் தேதி யுடன் சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் 6 மாதங்கள் மட்டுமே அவா் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.