தேர்தல் தோல்வியால் ராமனுக்கு கூட பெருஞ்சிக்கல்! மேலும் தாமதமாகுமாம் ராமன்கோவில் கட்டுமானம்

2 Min Read

அயோத்தி, நவ.10 அயோத்தி ராமன் கோயில் பணிகள் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும் என்று கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் பால ராமர் சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில் கோயிலில் நடைபெற்றும் வரும் கட்டு மானப் பணிகள் வரும் 2025 ஜூன் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கோயிலின் பிரதானப் பகுதிகளின் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரியில் பாலராமன் சிலை நிறுவப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வரும் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது பணிகள் மேலும் 3 மாதம் தாமதமாகிறது.

அதன்படி பணிகள் வரும் ஜூன் மாதம் நிறைவடையும். சுமார் 200 தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள் ளது. கோயிலின் முதல் மாடியின் தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் மோசமாகவும், மெல்லியதாகவும் உள்ளன. அவற்றை மாற்றிவிட்டு புதிய கற்கள் பதிக்கப்படும். அந்தப் பணிகளும் தற் போது நடைபெற்று வரு கின்றன. கோயிலின் சுற்றுச் சுவர்களில் பதிப்பதற்காக சுமார் 8.5 லட்சம் கியூப் அடி பரப்புள்ள பன்சி பஹார்பூர் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 6 சிறிய கோயில்களில் சிலை பிரதிஷ்டைக்காக ஜெய்ப் பூரில் இருந்து சிலைகள் வரவுள்ளன. அனைத்து ‘கடவுளர்’ சிலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் பிர திஷ்டை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித் தார். இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தேர்தலுக்காக அரைகுறையாக ராமர் கோவிலை மோடி திறந்து வைத்தார். இதற்கு பெரும் எதிர்ப்பலை எழுந்த போது சாஸ்திரம் சம்பிரதாயம் என்று ஏதே தோ புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு 2024 ஆம் ஆண்டு ஜூனிற் குள் முழுமையாக திறந்து விடுவோம் என்றார்கள் ஆனால் மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உத் தரப் பிரதேசத்தில் படு தோல்வி, குறிப்பாக அயோத்தி மற்றும் அதனை ஒட்டியுள்ள மக்களைவைத் தொகுதிகளில் படுதோல்வி இதனால் அயோத்தியை கைவிட்டுவிட்டார்கள். இப்போதும் ராமனுக்கே நாமம் போட்டுவிட்டார்கள், ராமர் பெயரைச் சொல்லி ஆயிரக்கணககான கோடிகள் வசூலித்தனர். ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் இணைந்து கோவில் கட்டிய பிறகு ராமனுக்கு போடுவதற்கு தங்கத்தால் ஆன நாமம் செய்துகொடுத்தார்கள். கோவில் கட்டிய பிறகு அந்த நாமம் போடப்படும் என்றார்கள். தங்க நாமம் கொடுத்தவர்களுக்கே நாமம் சாற்றப்பட்டு விட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *