வங்கதேசத்திற்கான மின் விநியோகத்தை 60 சதவிகிதம் துண்டித்த அதானி பவர்!

viduthalai
2 Min Read

டாக்கா, நவ.10- அதானி பவர் நிறுவனமானது அண்டை நாடான வங்கதேசத்திற்கு மின்சார விநியோகத்தை 60 சதவிகிதம் குறைத்துள்ளது. நிலுவைத் தொகையான ரூ.6750 கோடிக்கு மேல் (800 மில்லியன் டாலர்) வசூலிக்க தற்போது அதானி பவர் முயல்கிறது என்று வங்கதேசத்தின் கிரிட் ஆபரேட்டர் மற்றும் நிறுவனத்தின் நடவடிக்கையை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் 1,600 மெகாவாட் கோடா ஆலையிலிருந்து டாக்காவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் அதானி பவர், ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலிருந்து சுமார் 1,400 முதல் 1,500 மெகாவாட்டிலிருந்து இந்த மாதம் 700 மெகாவாட் முதல் 750 மெகாவாட்டாக விநியோகத்தை குறைத்துள்ளது.

இந்நநிலையில், 7.11.2024 அன்று பிற்பகுதியில், விநியோகம் சுமார் 520 மெகாவாட்டாக குறைக்கப் பட்டது என்று வங்கதேசத்திற்கான மின் மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் படிப்படியாக நிலுவைத் தொகையை செலுத்தி வருகிறோம், யாராவது விநியோகத்தை நிறுத்தினால் மாற்று நடவடிக்கைகளை எடுப்போம். எந்தவொரு மின் உற்பத்தியாளரும் எங்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம் என்று வங்கதேசத்திற்கான காபந்து அரசின் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆலோசகரான முகமது ஃபவுசுல் கபீர் தெரிவித்துள்ளார்.

நிலுவைத் தொகையை விரைவுபடுத்தியுள்ள போதிலும், அதானியின் குழுமம் அறிவித்த நவம்பர் 7-ஆம் தேதி பணம் செலுத்துவதற்கான காலக்கெடு நீக்கப்பட்டதாலும், தற்போது குறைந்த அளவிலான மின்சார விநியோகத்தையே வங்கதேசம் பெறுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வங்கதேசத்திற்கான தேவை மற்றும் நிலுவைத் தொகையை மனதில் வைத்து மின்சாரம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது என்று அதானி பவர் வட்டாரம் தெரிவித்துள்ளது.

தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்
பணமதிப்பிழப்பு குறித்து ராகுல்!

இந்தியா

புதுடில்லி, நவ.10- பணமதிப்பிழப்பு அமல்படுத்தப் பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மேற்கொண்டது. அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நேற்றுடன் (8.11.2024) 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்ட இந்த நாளன்று பாஜகவை எதிர்க் கட்சிகள் விமரிசித்து வருகின்றன. இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘பணமதிப்பிழப்பு அமல்படுத்தப் பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துகிறது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களை அழித்து பணமதிப்பிழப்பு ஏகபோகங்களுக்கு வழி வகுத்தது. வணிகங்களுக்கு அச்சம் தரும் சூழலை உருவாக்கும் திறமையற்ற, தவறான நோக்கங்களைக் கொண்ட கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்கிவிடும்.
நாடு முழுவதும் உள்ள வணிகங்களை மேம்படுத்த, சுதந்திரம் மற்றும் முறையான விதிமுறை களுடன் கூடிய புதிய ஒப்பந்தம் தேவை’ என்று பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *