விஜய்யின் புதிய படத்தில் நடிக்க சத்யராஜ் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் தலைவா, மெர்சல் படங்களில் சத்யராஜ் ஏற்கெனவே நடித்துள்ளார். ஆதலால் புதிய படமான “தளபதி-69” இல் நடிக்க சத்யராஜை படக்குழு அணுகியுள்ளது. ஆனால், த.வெ.க. கட்சியை ஆரம்பித்து அரசியல்வாதியாக விஜய் மாறியதை சுட்டிக்காட்டி, அவருடன் கருத்து வேறுபாடு இருப்பதால் நடிக்க முடியாதென சத்யராஜ் கூறி விட்டதாக கூறப்படுகிறது.