சென்னை, நவ. 9- மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி நிறுவனங்களில் போதைபொருள் எதிர்ப்பு மன்றங்கள் (Anti -Drug Club) மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர். தமிழ் நாட்டில் போதைப்பொருட்கள் விநியோகத்தைக்கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவினர் ஏற்பாட்டில் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடந்த 11.8.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மாநில அளவில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “போதையில்லா தமிழ்நாடு” என்ற அறைகூவல் விடுத்தார்.
இதையொட்டி போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய போதைப்பொருளின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து, தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு ஏற்கெனவே மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் போதைப்பொருள் எதிர்ப்பு குழு மற்றும் தன்னார்வலர்கள் அணி தொடங்க வலியுறுத்தி அறிவிப் புகளை வெளியிட்டுள்ளது. தற்போது, தொடங்கப்பட்ட இந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்களை ஒழுங்குபடுத்தவும் ஊக்குவிக்கவும் தற்போது தமிழ்நாடு அரசானது பிரத்யேக அரசாணை (G.O (Ms) No. 52, dated: 14.10.2024 Home, Prohibition & Excise (XIV) Department] வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை நிலை நிறுத்துவதற்கும், மாணவர்களை இந்த முயற்சியில் பங்குதாரர்களாக ஈடுபடுத்துவதற்கும். இரண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன:
i NSS/NCC/RRC/YRC தன்னார்வலர்கள் (Volunteers) 30 மணி நேர தன்னார்வத் திட்டம்
ii. Anti Drug Club அனைத்து கல்வி நிறுவனங்கள்.
இந்த அரசாணையின் படி ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் Anti Drug Club (போதை பொருள் எதிர்ப்பு குழு) மற்றும் VolunteeringTeam (தன்னார்வலர்கள் அணி) என்ற அமைப்புகள் உருவாக் கப்பட்டு அதனுடைய நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மற்றும் சிறப்பாக செயல்படவும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அதிகாரி (CEO), மண்டல இணை இயக்குநர் (உயர்கல்வி துறை) மாவட்ட நாட்டு நலப்பணி பொறுப்பு அதிகாரி District Nodal NSS Programmee இணை இயக்குநர் (சுகாதார துறை) ஆகியோர்களை உறுபினர்களாக கொண்டும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (EBCID) உறுப்பினர் செயலராகவும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் கூடுதல் காவல் துறை இயக்குனர் (EBCID ஆணையர் (உயர்கல்வி துறை ஆணையர் (பள்ளி கல்வி துறை). துறை இயக்குனர் (NCC) மற்றும் உறுப்பினர் செயலாளர் (MMU) ஆகியோர்களை கொண்டும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.