மேட்டூர் அணை நிலவரம்!

viduthalai
2 Min Read

மேட்டூர், நவ. 9- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று (9.11.2024) காலை வினாடிக்கு 9,466 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,149 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.60 அடியில் இருந்து 106.59அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,466 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,149 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.64 டிஎம்சியாக உள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுக்க
மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?
தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை, நவ.9- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்றார்.

தற்போது தெலங்கானாவும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசின் நாடகம் அம்பலமாகியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பான தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

தகவல் சரிபார்ப்பகத்தின் சமூகவலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இது முற்றிலும் பொய்யான தகவல். தெலங்கானா அரசு நடத்துவது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென் சஸ்) அல்ல.

அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் இதை ‘சர்வே’ என்றுதான் கூறியுள்ளார். இடஒதுக் கீட்டுக்காக பயன்படுத்தப்படுவது ஒன்றிய அரசு நடத்தும் ‘சென்சஸ்’தான். மாநில அரசுகள் நடத்தும் ‘சர்வே’ அல்ல
ஒன்றிய அரசால் மட்டுமே ‘சென்சஸ்’ நடத்த முடியும் என்று அரசமைப்பின் 7ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள் ‘சர்வே’ நடத்த மட்டுமே அரசமைப்பில் அதிகாரம் உள்ளது.
மு.க.ஸ்டாலினும் சட்டசபையில் கொண்டு வந்த தனித்தீர்மானத்தில், 7ஆவது அட்டவணையை சுட்டிக்காட்டி மத்திய சட்டப்படி நடத்தப்படும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் சட்டப்படி நிலைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *