சென்னை, நவ. 9- போட்டித் தோ்வுக்கான பயிற்சி பெற தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோ மூலம் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பட்டய கணக்காளா் – இடைநிலை, நிறுவன செயலா் – இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா் – இடைநிலை ஆகிய போட்டித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில், சோ்ந்து பயிற்சி பெற விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இளநிலை வணிகவியல் பாடப் பிரிவில் பட்டம் பெற்றவராகவும், அவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஒரு ஆண்டு வழங்கப்படும் இந்தப் பயிற்சிக்காக, தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். தகுதியுள்ள மாணவா்கள் இந்தப் பயிற்சியில் சேர தாட்கோ-வின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.