கருவறைக்குள் பிற ஜாதியினரை அனுமதிப்பதில்லை என்ற வாதம் வரும் போதெல்லாம், 63 நாயன்மார்கள் பற்றி தெரியுமா? எல்லா சமூகத்தினரும் அதில் உள்ளனர் என்று கொக்கரிப்பார்கள்.
உடனே, நாயன்மார்களெல்லாம் கருவறைக்குள் அனுமதிக் கப்பட்டவர்கள் என்றோ சிவனை போற்றி புகழ்ந்து பக்தி பரப்பியவர்கள் என்றோ நினைத்துவிடாதீர்கள்.
63 நாயன்மார்களும் செய்த கொலை, கொள்ளை, கொடூரங்களுக்கு இன்றைய சட்டதின் படி வாழ்நாள் சிறை அல்லது தூக்குத் தண்டனை கிடைத்திருக்கும்.
கழற்சிங்க நாயனார்
இவர் பல்லவர் குலத்திலே தோன்றிய அரசர். இவர் ஒரு நாள் திருவாரூரில் உள்ள கோயிலுக்குச் சென்றார். அப்பொழுது கோயிலை வலம்வந்த அரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து முகர்ந்தாள். அதைக் கண்ட செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை முகர்ந்தாள் என்று வெகுண்டு, அம்மலரை எடுத்து முகர்ந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். அரசியின் அழுகை சத்தத்தை கேட்டுவந்த அரசர் வெகுண்டு ‘அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?’ என வினவினார்.
அருகே நின்ற செருத்துணையார், ‘இவள் இறைவனுக்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்’ என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, ‘பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்?’ என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையை வெட்டினார். இதுதான் நமக்குச் சொல்லப்பட்ட கதை. ஆனால், உண்மை என்னவென்றால் சமணத்தை பின்பற்றி சைவத்தின் சூழ்ச்சியை நன்குணர்ந்து அதை மன்னனுக்கு எடுத்துரைக்கும் பணியைச் செய்தவர் சங்கா. இவரது தந்தை பெருவணிகராக இருந்து பின்னர் சமணத்தை பின்பற்றிய அமோகவர்ஷா நிருபதுங்கன்.
இவர்தான் சமணத்தைப் பின்பற்றிய பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மனுக்கு தனது மகளை மணமுடித்தார்.
மூன்றாம் நந்திவர்மன் தான், கழற்சிங்க நாயனார்.
வரலாற்றை எடுத்துகொண்டால் நந்திவர்மனுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட நரசிம்மவர்மன் காலத்தில் சீனத் துறவியான யுவாங்க்சுவாங் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வருகை புரிகிறார். சுமார் 8 ஆண்டுகள் இவர் தமிழ்நாட்டில் தங்கி இருந்தாக கூறப்படுகிறது. இவரது நூல்களில் எங்குமே சைவத் திருத்தலம் குறித்து கூறப்படவில்லை. குறிப்பாக காஞ்சியில் சமணத் தலமும், பவுத்த விகாரையும் இருப்பதை குறிப்பிடுகிறார்.
குறிப்பாக இன்று ஏகாம்பரேஷ்ஸ்வரர் என்ற பெயரிலான கோவில் – புகழ்பெற்ற முதல் சமண தீர்த்தங்கரின் பள்ளியாக இருந்ததாக யுவாங் சுவாங் நூல் மூலம் தெரியவருகிறது.
அதே போல் இன்றைய திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் குறித்தும் எந்த ஒரு பதிவு எழுதவில்லை. 8 ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்து பல நூல்களை படித்த, பல மக்களோடு பழகிய அவருக்கு ஒருவர் கூடவா திருவாருரில் உள்ள தியாகராஜர் கோவில் குறித்து கூறவில்லை.
சைவ சமயத்தை வளர்க்க உதவிய மன்னர்களை புகழ்ந்து பாடியதோடு அவர்களின் மறைவிற்குப் பிறகு சைவ சமயத்தை வளர்க்க அவர்களை மய்யமாக வைத்தே கதை எழுதி உள்ளார்கள்.
அதில் பல கதைகள்தான் 63 நாயன்மார்கள் கதையும்.