பெங்களூரு வந்து தன்னுடன் விவாதம் நடத்தத் தயாரா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சவால் விடுத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றியுள்ளார். எத்தனை வாக்குறுதிகளை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது என விவாதிப்பாரா என்று கேள்வியெழுப்பினார்.