மும்பை, நவ.8- மராட்டிய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த தேர்தலில் தங்களது மகாவிகாஸ் அகாடி கூட் டணி வெற்றி பெறும் என்றும், மராட்டியத்தின் முகத்தை மாற்றுவேன் என்றும் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) தலைவர் சரத்பவார் பேசியிருந்தார்.
இந்நிலையில் சாங்கிலி மாவட்டம் ஜாட் பகுதியில் நேற்று முன்தினம் (6.11.2024) பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி சார்பில் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியை சேர்ந்த கிராந்தி சங்கட்னா எம்.எல்.சி. சதாபாவ் ‘கோட் பேசினார். அப்போது அவர், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத்பவாரின் முக அமைப்பை இழிவுப்படுத்தும் வகையில் பேசினார். அப்போது துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். சதாபாவ் கோட்டின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு காட்சிப்பதிவை வெளியிட்டார்.
இருப்பினும் சரத்பவார் பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அவரது அண்ணன் மகனும், சரத்பவார் கட்சியை பிளவுப்படுத்தியவருமான துணை முதலமைச்சர் அஜித்பவார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சரத்பவார் முக அமைப்பை விமர்சித்த பிஜேபி கூட்டணி தலைவரின் அநாகரிக அரசியல்
Leave a Comment